Posted on 15 February 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- முட்டை – 6
- வெங்காயம் – 5
- பச்சை மிளகாய் – 3
- கறிவேப்பிலை – தேவையானது
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- மிளகுத் தூள் – அரை டீஸ்பூன்
- நாட்டுத் தக்காளி – 4
- மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன்
- கொத்தமல்லி – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முட்டையை அடித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தில் கால் பகுதி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து குழிப்பணியாரச் சட்டியில் விட்டு எடுக்கவும்.
- அல்லது சின்ன கிண்ணத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் வேக வைத்து ஆறிய பிறகு எடுக்கவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து மீதியிருக்கும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி உப்பு, மிளகாய்த் தூள் போட்டு சுருள வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து ஒரு கொதி வந்தவுடன் அவித்த முட்டைக் கலவையினை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி விடவும்.
Posted on 15 February 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- முட்டை – 3
- சின்ன வெங்காயம் – 10 – 15
- பச்சை மிளகாய் – 1
- மிளகுத் தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- நெய் – அரை ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முட்டை நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக வெட்டி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயம், மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி அதை அடித்து வைத்துள்ள முட்டையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் கலந்து முட்டைக் கலவை தயாரித்து ஊற்றி நன்கு கிளறினால் முட்டை பொடிமாஸ் ரெடி.
Posted on 11 February 2009 by Sarmila
Ingredients:
- Eggs- 5
- Onion- 1 (medium)
- garlic- 3 pods
- ginger- 1″
- green chilli – 1
- corriander leaves- small fistful
- curry leaves- few
- mint leaves- 5 or 6
- Tomato- 1 (big)
- turmeric- 1/4 tsp
- sambar powder- 1/4 tsp
- Some curry powder- 1/2 tsp (I used sakthi chicken masala for an added flavour)
- cloves- 2pattai (cinnamon stick) – 1″
- jeera seeds- 1 tsp
- fennel seeds – 1 tsp
- salt- as required
Method
- Boil eggs and peel off the shell. Cut them in halves and set aside.
- Heat 2 tsp of oil in a kadai and fry the onions, ginger, garlic, chilli, corrinader leaves, curry leaves and mint until the onion turns into a pale brown color and becomes soft.
- Finally add the tomatoes and saute until completely mashed.
Switch off the gas and allow it to cool.
- Grind it all to a smooth paste.Heat one tbsp of oil in a kadai and fry cloves and cinnamon stick. Next add the ground paste , turmeric , sambhar powder and curry powder.
- Add required salt. After 5 mins add the cumin-fennel powder and a cup or more of water.
- Bring to a nice boil.Slip in the eggs slowly and carefully mix well .
Test for seasonings and switch off the gas until the gravy reaches the desired consistency. Finally add some corriander leaves and mix.
Posted on 11 January 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
செய்முறை:
- தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
- அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆர வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.