Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப்பொருட்கள்:
- உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2
- சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப்
- நெய் – 1/2 கப்
- ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
- பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள்
- மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள்
செய்முறை:
- உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
- முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும்.
- அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
Posted on 11 May 2009 by Sarmila
தேவையான பொருட்கள் :
- பீட்ரூட் (துருவியது) – ஒரு கப்
- பச்சை பால் – இரண்டு கப்
- சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ – அரை கப்
- நெய் – நான்கு டேபிள்ஸ்பூன்
- முந்திரி – ஒரு டீஸ்பூன்
செய்முறை :
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடனும்
- *நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
- *கிளறிக்கொண்டே இருக்கணும்.
- *கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறனும்.
- *அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
- *துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கவும்.
- *டேஸ்டி ஹல்வா ரெடி.
Posted on 11 March 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- பேரீச்சம்பழம்(விதைநீக்கிபொடியாகநறுக்கிய) – 1கப்
- சீனி(சக்கரை) – 1கப்
- நெய் – 1கப்
- பால் -அரைகப்
- பாதாம்பருப்பு – தேவையானளவு
- முந்திரிப்பருப்பு – தேவையானளவு
- குங்குமப்பூ – தேவையானளவு
- வெந்நீர்(சுடுதண்ணீர்) – 1/2 கப்
செய்முறை:
- முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன் வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு ஊற வைக்கவும் (பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு (4 – 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும் அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்கவேண்டும்).
- பேரீச்சம்பழம் ஊறிய பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
- ஒரு தட்டு முழுவதிற்கும் சிறிதளவு பட்டரை அல்லது நெய்யை பூசி வைக்கவும்.
- பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் சீனி(சக்கரை),தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு காச்சவும்.
- சீனி(சக்கரை) இளம்பாகு பதத்தை அடைந்ததும் அதனுள் அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது ,நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
- அதன் பின்பு இதனுடன் முந்திரி, குங்குமப்பூ, பாதாம் பருப்பு ஆகியவற்றைபோட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
- இவை யாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ அல்வா தயாராகி விட்டது.
- பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய தட்டில் போடவும்.
- தட்டில்போட்ட பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.
- பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய ஆழத்திற்கு கோடுகளை போடவும்.
- இவை யாவற்றையும் செய்த பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக ஆற விடவும்.
- இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி எடுக்கவும்.
- தேவையான அளவு வெட்டி எடுத்த பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை ஒருதட்டில் விரும்பியவடிவத்தில் வைத்து அடுக்கவும்.
- அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பறிமாறவும்