Section | Icecream

Carrot Ice cream

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 4
  • பால் – 1 கப்
  • சர்க்கரை – 1/4 கப்
  • மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
  • பிஸ்தா பருப்பு – 8
  • வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

  • கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
  • ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
  • குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.

Kulfi Ice cream

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • பால் – 2 லிட்டர்
  • பாதம் – 15 கிராம்
  • பிஸ்தா – 15 கிராம்
  • முந்திரி – 15 கிராம்
  • கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
  • ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
  • ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
  • ஐசிங் சுகர் – 200 கிராம்

செய்முறை:

  • முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும்.
  • பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில்வைத்து கிளறவும்.
  • நன்கு கெடியானதும் இறக்கவும்.
  • பாதம்,முந்திரி,பிஸ்தாவை த்ண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • ஜெலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

Chocolate Ice cream2

Posted on 11 January 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • பால் – 500 மில்லி
  • கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி
  • சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை பவுடர் – 50 கிராம்
  • ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

  • முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
  • பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

Vennila

Posted on 11 January 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • ரின் பால் -1 ரின்
  • தண்ணீர் -1,1/2 ரின்
  • பால் மா -2 மே.கரண்டி
  • சீனி -2 மே.கரண்டி
  • கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி
  • வனிலா -2 தே.கரண்டி
  • இளஞ்சூடான நீர் -1/2 கப்

செய்முறை:

  • ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும்.
  • பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.
  • பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும்.
  • அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் வைக்கவும்.
  • திரும்பவும் இரண்டு மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்.
  • நன்றாக ஐஸ் குளிர்ந்து இறுகி வந்தவுடன் ஐஸ் பரிமாறும் பாத்திரத்தில் இட்டு பரிமாறலாம்.