தூதுவளை-சூப்

தேவையான பொருள்கள்:

  • தூதுவளை இலை – 1 கப்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
  • கொத்துமல்லி – சிறிது
  • எண்ணெய் – சிறிது

செய்முறை:

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு, பொரிந்தவுடன் தூது வளை இலையைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • இத்துடன் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு ஒரு கொதிவிடவும்.
  • கடைசியாக கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Comment