ஆந்திரா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • வஞ்சிர மீன் – கால் கிலோ
  • மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • நாட்டுத் தக்காளி – 2 (பொடியாக வெட்டவும்)
  • சின்ன வெங்காயம் – 10 – 15 (பொடியாக வெட்டவும்)
  • பூண்டு – 10 பல் (பொடியாக வெட்டவும்)
  • புளி – 25 கிராம்
  • கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
  • எண்ணெய் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 2, நீளமாக வெட்டவும்

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும்.
  • பிறகு பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு போட்டு வதக்கி சுருண்டு வந்த பிறகு புளியை கரைத்து ஊற்றி, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு மீனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தீயை குறைக்கக் கூடாது. பெரிய தீயில் கொதிக்கவிடவும்.
  • அப்பொழுதுதான் மீனில் உப்பு-காரம் ஏறும். குழம்பு கொதிக்கும் பொழுது கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு குழம்பு சுண்டி வந்த பிறகு இறக்கவும்.இந்த குழம்பு காரமாக இருக்கும். கவுச்சி நாற்றம் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *