Chocolate Ice cream2

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • பால் – 500 மில்லி
  • கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி
  • சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி
  • சர்க்கரை பவுடர் – 50 கிராம்
  • ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:

  • முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
  • பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

Vennila

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • ரின் பால் -1 ரின்
  • தண்ணீர் -1,1/2 ரின்
  • பால் மா -2 மே.கரண்டி
  • சீனி -2 மே.கரண்டி
  • கஸ்ராட்பவுடர் -2 தே.கரண்டி
  • வனிலா -2 தே.கரண்டி
  • இளஞ்சூடான நீர் -1/2 கப்

செய்முறை:

  • ரின் பால், தண்ணீர், சீனி இவற்றைக் கரைக்கவும்.
  • பால் மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்துச் சூடாக்கவும்.
  • பின் கஸ்ராட் பவுடரைச் சிறிதளவு நீர் சேர்த்து கரைத்துப் பாலுடன் சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறவிடவும்.
  • அத்துடன் வனிலாவையும் சேர்த்து அடிகருவியினால் (beater)அடித்துக் குளிரூட்டியில் வைக்கவும்.
  • திரும்பவும் இரண்டு மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்.
  • நன்றாக ஐஸ் குளிர்ந்து இறுகி வந்தவுடன் ஐஸ் பரிமாறும் பாத்திரத்தில் இட்டு பரிமாறலாம்.

Maida Bonda

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • மைதாமாவு -1கப்
  • சர்க்கரை -3/4கப்
  • ஏலக்காய் -2
  • சமயல்சோடா -1சிட்டிகை
  • எண்ணை -பொரிப்பதுக்கு தேவையான அளவு

செய்முறை:

  • ஏலக்காயை பொடிசெய்யவும்.
  • மைதாவுடன்,சர்க்கரை,ஏலக்காய்பொடி,சமயல்சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதம் கரைத்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
  • வாணலியில் எண்ணை காயவைத்து ஊறவைத்த மாவை சிறிதளவு கையில் எடுத்து போண்டாவாக எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Chettinad chicken

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/4 கிலோ,
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2,
  • பச்சை மிளகாய் – 1,
  • சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
  • சீரகம் – 1 தேக்கரண்டி,
  • சோம்பு – 1 தேக்கரண்டி,
  • மிளகு – 1 தேக்கரண்டி,
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
  • கறிவேப்பிலை – சிறிது,
  • கொத்தமல்லி தழை – 1 மேஜைக்கரண்டி,
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • சிக்கனை சுத்தம் செய்து கொழுப்பு,தோல் இல்லாமல் ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கரகரப்பாக அரைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கவும்.
  • வதங்கிய பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வேக வைத்த சிக்கன்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

Chettinad Chicken Briyani

Posted on 11 January 2009

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி – 1 1/2 கப்
  • கோழி – 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
  • வெங்காயம் – 1 (பெரிதாக நறுக்கியது)
  • தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 5
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் – 1 1/2 கப்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • கொத்தமல்லி, புதினா – 1/2 கப்
  • தயிர் – 1/2 கப்
  • எண்ணெய் – 100 மில்லி
  • நெய் – 3 தேக்கரண்டி
  • உப்பு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1/4 தேகரண்டி
  • பட்டை
  • லவங்கம் – 5
  • பிரியாணி இலை – 1
  • ஏலக்காய் – 3

செய்முறை:

  • கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
  • அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
  • இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
  • இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
  • நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
  • கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
  • இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 – 15 நிமிடம் தம் போடவும்.
  • சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

Capsicum Masala Rice

Posted on 18 December 2008

Ingredients:

  • 3 cups of cooked rice (each grain should be separate, add a tsp of ghee to the rice and combine)
  • 1 1/2 tbsp ghee/oil
  • 1 tsp mustard seeds
  • 10-12 fresh curry leaves
  • 2 big capsicums (bell peppers – thinly sliced)
  • salt to taste 1 tbsp
  • grated fresh coconut (optional)
  • 1 tbsp roasted peanuts (garnish)
  • To be roasted in ghee and ground to a fine powder:

  • 3-4 dry red chillis (adjust to your spice level)
  • 1 tbsp coriander seeds
  • ½ tsp cumin seeds
  • 1 tsp black gram dal
  • 1” cinnamon stick
  • 2 tbsp roasted peanuts
  • 1 tsp ghee

Method :

  • Heat ghee in a cooking vessel on medium heat and add cumin seeds and black gram and fry till the cumin splutters and the dal turns light brown.
  • Add the coriander seeds, cinnamon stick, curry leaves and dry red chillis and fry further for another minute till the rawness disappears and the flavors come out.
  • Finally add the roasted peanuts and combine with the other spices for a few seconds and turn off heat. Once cool, grind to a make a fine powder.
  • In the same vessel, add oil/ghee and once its hot, add mustard seeds and let them splutter.
  • Add the curry leaves and let the flavor of the curry leaves come out and the leaves turn crisp.
  • Add the sliced capsicums and fry them for approx 3 minutes. Don’t over cook them, let the capsicums retain their crunchy texture. Add salt to taste and combine well.
  • Reduce heat and add the cooked rice and combine with the spice mixture.
  • Add the grated coconut,roasted peanuts and ground masala powder and combine with the rice till its well mixed. Serve hot
Page 67 of 69« First...«646566676869»

Categories