Chettinad Poli

தேவையான பொருட்கள்:

  • மைதாமாவு — 1/4 கிலோ
  • முந்திரி பருப்பு — 50 கிராம் ( பாதி பாதியாக ஒடித்துக் கொள்ளவும்)
  • சர்க்கரை — 200 கிராம் (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
  • தேங்காய் — 1 என்னம் ( துருவியது)
  • நெய் — 4 டீஸ்பூன்
  • ஏலப்பொடி — 1/2 டீஸ்பூன்
  • எண்ணைய் — 1/2 லிட்டர்

செய்முறை:

  • மைதாமாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக் பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து ,வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையும்,தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாக கிளறி விடவும்.
  • முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த முந்திரி, ஏலப்பொடியை சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.
  • மைதாமாவை வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து வட்டங்களை போட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.
  • பொரித்த வட்டங்களின் நடுவே தேங்காய், சர்க்கரை கலவையை வைத்து மடித்து மூட செட்டிநாட்டு சுருள் போளி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *