Mango Halwa

தேவையானப்பொருட்கள்:

  • நன்கு கனிந்த மாம்பழம் – 1
  • ரவா – 3/4 கப்
  • சர்க்கரை – 3/4 கப்
  • நெய் – 1/2 கப்
  • முந்திரிப்பருப்பு – சிறிது
  • ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது.
  • விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால், இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது. தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
  • சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அதே வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்னர் அதில் பொடித்த ரவாவையும், சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.
  • அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *