Tag Archive | "Brinjal"

Tags: , , , ,

Brinjal rice

Posted on 11 June 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • அரிசி – 1 கப்கத்திரிக்காய் – 4 (நடுத்தர அளவு)
  • பெரிய வெங்காயம் - 1
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – 1 டீஸ்பூன் அல்லதுதேவைக்கேற்றவாறு
  • வாங்கி பாத் பொடி செய்வதற்கு:

  • காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3
  • தனியா – 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • பட்டை – 1 சிறு துண்டு
  • கிராம்பு – 2
  • தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்எண்ணை – 2 டீஸ்பூன்

செய்முறை:

  • ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
  • கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்தெடுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் உப்பைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவும்.
  • அரிசியை வேக வைத்து சாதமாக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
  • கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து காய் வேகும் வரை வதக்கவும்.
  • பின் அதில் வாங்கி பாத் பொடியைத்தூவிக் கிளறவும். கடைசியில் சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
  • பொரித்த அப்பளம், வடவம் அல்லது சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.

0

Tags: , , ,

கத்தரிக்காய்-வதக்கல்

Posted on 15 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • கத்தரிக்காய் – 500 கிராம்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 4
  • பெருகாயத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • வெல்லம் – நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை,
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்

செய்முறை:

  • கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போடவும். புளியைக் கெட்டியாகக் கரைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுக் கிளறி, கத்தரிக்காய், புளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் எல்லாம் சேர்த்துப் போட்டு மூடி வைக்கவும்.
  • அடிக்கடி கிளறி விடவும். கத்தரிக்காய் நன்றாக குழையாமல் வெந்து வதங்கியதும் தேங்காயைத் துருவிக் கிளறி இறக்கி வைக்கவும்.

0

Tags: , , ,

சுட்ட கத்தரிக்காய்

Posted on 15 February 2009 by Sarmila

  • 4 பெரிய கத்தரிக்காயை காம்புடன் சுட்டு, தோலை உரித்து பூச்சி இல்லாமல் பார்த்து பிசைந்து, நெய் இரண்டு தேக்கரண்டி, துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் 2 கிள்ளிப்போட்டு தாளித்து, பெருங்காயப்பொடி 1/2 தேக்கரண்டி உப்பும் சேர்த்து கலக்கவும். ரசம் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடலாம்.
  • தயிர் கலந்து தயிர் பச்சடியாகவும் சாம்பார், குழம்பு சாதத்துடன் சாப்பிடலாம்.
  • இதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து தயிரில் கலந்து மல்லி இலை, கறிவேப்பிலை போட்டு சுட்ட கத்தரிக்காயைப் பிசைந்து கலந்தும் பரிமாறலாம்

0

Tags: , , ,

Brinjal Briyani Fry

Posted on 11 February 2009 by Sarmila

Ingredients:

  • Brinjal- 2
  • Onion- 1
  • Cumin powder- a pinch
  • Turmeric powder- 1/4 tsp
  • Tamarind- Small gooseberry size
  • Mustard seeds- 1/4 tsp
  • Oil and Salt- as required
  • Curry leaves- few
  • Make a paste of:
  • Grated coconut- 2 spoons
  • Garlic- 1
  • Red chilies- 2

Method:

  • Cut Onion and Brinjal into small pieces.
  • Prepare a paste by grinding Grated Coconut, Red chilies and Garlic with little water in blender.
  • Soak the Tamarind for 10 minutes. Take the pulp out from the Tamarind.
  • Heat Oil in a pan and add Mustard seeds. Once it splutters add Onion and Curry leaves to the pan. Fry the Onions till it turns into golden brown in color.
  • Add Brinjal, Turmeric powder and fry for 2 minutes.
  • Then add the Tamarind pulp and fry for 2 minutes.
  • Finally add the ground Coconut paste and a pinch of cumin Powder.Fry till it turns into thick.

0

Tags: , , ,

Brinjal Fry

Posted on 11 February 2009 by Sarmila

Ingredients:

  • Brinjal(Small ones) – 6
  • Onion – 1/2
  • Masala powder or Chili powder – 1/2 to 1 tspn
  • Mustard seeds and Urad dal – 1/2 tspn
  • Curry leaves – a sprig
  • Salt – to taste
  • Oil – 3 to 4 tspn

Method:

  • Thinly slice Brinjals and Onion.
  • Heat Oil in a pan, add Mustard seeds and Urad dal. Once the seeds starts spluttering add Curry leavs and Onion, fry till the Onion are transparent.
  • Add Brinjals and fry till they are half cooked. Then add Masala powder and Salt, fry till the Brinjals are completed cooked.

0