Tag Archive | "Mutton"

Tags: , ,

Chettinad Mutton Biriyani-2

Posted on 15 February 2009 by Sarmila

Ingredients:

  • Pulav Rice (Basumathi) – 1 kilo
  • Meat – 1 kilo
  • Onions – 1/4 kilo
  • Garlic – 35 gms 3 full ones
  • Ginger – 50 gms 2 inch piece 2
  • Tomatoes – 1/4 kilo
  • Curds – 1/4 Litre (1 Glass)
  • Green Chillies – 4
  • Cinnamon – 1 Inch piece
  • Cloves – 4
  • Cardamom – 4
  • Chilli powder – 3 Tablespoon
  • Salt – To taste
  • Coriander Leaves – 1 Bunch
  • Mint (Pudhina) Leaves – 1 Bunch
  • Kesari Powder (Orange Kesari) – 1 Teaspoon
  • Saffron – 1/2 Teaspoon
  • il or Ghee – 1/2 Cup
  • Lime Juice – Juice of 1 big lim

Method:

  • Grind garlic, onion, and ginger separately.
  • Cut onions and tomatoes.
  • Clean meat and cut into pieces.Soak rice.
  • Heat oil in a heavy bottom vessel, add cinnamon, caradmom, cloves.
  • Then add cut onions, cook till the onions are well browned.
  • Then add ground garlic and onions.
  • Add a little coriander leaves, fry for a few minutes.
  • Then add ground green chillies, mint leaves and add the curds, tomatoes, chilly powder, ground ginger and fry well.
  • Then add the meat and fry well.
  • Add 2 glasses of water and cook till meat is cooked well, add remaining coriander and mint leaves and lime juice, cover and cook.Cook the soaked Basumathi rice for 10 minutes.
  • Then take a vessel, put one layer of meat, then one layer of cooked rice.
  • Repeat till all the rice is layered with the meat gravy.
  • Mix saffron in a little milk, and kesari powder and pour on the rice enenly. Cover put on low fire and put burning charcoal on top.
  • Serve after 10 minutes.

0

Tags: , , ,

Chettinad Mutton Fry

Posted on 11 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கறி – ஒரு கிலோ
  • சி. வெங்காயம் – நூறு கிராம்
  • தக்காளி – நூறு கிராம்
  • பூண்டுப் பல் – இருபது
  • இஞ்சி & பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • ப.மிளகாய் – பத்து
  • வரமிளகாய் – பத்து
  • மஞ்சள் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மல்லிப் பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
  • உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
  • எண்ணை – நான்கு டேபிள் ஸ்பூன்
  • சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – மூன்று கொத்து

செய்முறை:

  • பூண்டு, சி.வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.
  • தக்காளியை நான்காக நறுக்கியும், ப.மிளகாயை தட்டியும் வைக்கவும்.
  • சோம்பை தட்டியும் வரமிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி விதை நீக்கியும் வைக்கவும்.
  • கறியை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி & பூண்டு விழுது, தட்டிய ப. மிளகாய், இருநூறு மிலி தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணை முழுதும் ஊற்றி சோம்பு, வரமிளகாய் தாளித்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • ஒரு நிமிடம் கழித்து தக்காளித் துண்டங்களை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி கரைந்து எல்லாம் சேர்ந்து எண்ணை மேலே பிரியும் போது கறிக் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிண்டி விடவும்.
  • கறி நன்றாக வெந்து தண்ணீர் முழுதும் வற்றியதும் இறக்கவும்.

0

Tags: , , , , ,

Lamb leg soup Chettinad

Posted on 11 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்)
  • மிளகு -2- 3 டீஸ்பூன்
  • மல்லி – 2 டீஸ்பூன்
  • சீரகம் -2டீஸ்பூன்
  • பூண்டு – 6 பல்
  • மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 1 (விரும்பினால்)
  • நல்ல எண்ணெய் – 2டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • மல்லி இலை – சிறிது
  • கருவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை:

  • கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உறித்து வைக்கவும்.ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
  • மிளகு,சீரகம்,மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும்.மிக்ஸியில் மூன்றையும் போட்டு ,வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட)தண்ணீர் வைத்து உப்பு போடாமல் , அரைத்த மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்,இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  • ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்த வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம்.மல்லி இலை தூவவும்.
  • சுவையான,சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.இதனை அப்படியே பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.

0

Tags: , , ,

Chettinad Mutton Biriyani

Posted on 11 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • சீரக சம்பா அரிசி – 3 கப்,
  • மட்டன் – 1/2 கி,
  • இஞ்சி – 50 கிராம்,
  • பூண்டு – 25 பல்,
  • பெரிய வெங்காயம் – 4,
  • சின்ன வெங்காயம் – 15,
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் – 4,
  • கிராம்பு – 4,
  • பட்டை – 4 துண்டு,
  • ஜாதிக்காய் – பாதி,
  • ஏலக்காய் – 4,
  • மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
  • கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
  • தேங்காய் – 1 மூடி,
  • முந்திரி – 10,
  • தயிர் – 1/2 கப்,
  • எலுமிச்சம்பழம் – 1 மூடி,
  • புதினா – 1 கட்டு,
  • மல்லி – 1 கட்டு,
  • நெய் – 1/2 கப்,
  • எண்ணெய் – 1/2 கப்.
  • தாளிக்க

  • கிராம்பு – 3,
  • பட்டை – 3 சிறிய துண்டு,
  • ஏலக்காய் – 3,
  • பிரிஞ்சி இலை – 1,
  • சோம்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:

  • மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
  • பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
  • துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
  • காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
  • தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
  • சேர்க்கவும்.
  • இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
  • உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
  • பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
  • பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்

0

Tags: , ,

Mutton Gravy

Posted on 11 January 2009 by Sarmila

Ingredients:

    gravy

  • Mutton – 1/2 kg
  • Onion – 1/2 cup (finely chopped)
  • Ginger Garlic paste – 1/2 tsp
  • Chilli powder – 2 tsp
  • Turmeric powder – 1/2 tsp
  • Curd – 2 cups
  • Coconut – 3 tbsp
  • Cloves – 1
  • Cinnamon stick -1
  • Fennel seeds – 1 tsp
  • Curry leaves – few
  • Salt – to taste
  • Oil -2 tsp

Method:

  • Wash and clean Mutton pieces.
  • Heat a vessel. Add Curd, Mutton pieces, Salt, Onion, Turmeric powder, Chilli powder, Ginger garlic paste and allow mutton to cook well.
  • Then heat Oil in a pan. Add Cinnamon, Cloves, Fennel seeds, Curry leaves and add this to the gravy.
  • Grind Coconut in to a paste and add this to the gravy. Bring to boil once and remove from heat.

0

Tags: , , ,

Chettinad curry

Posted on 11 January 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – கால் கிலோ
  • தக்காளி – இரன்டு
  • பச்சமிளகாய் – நான்கு
  • இஞ்சி பூண்டு பேஸ் ட் – ஒரு மேசக் கரண்டி
  • (கரம் மசாலா,மிளகு தூள்,மிளகாஅய் தூள்,சீரக தூல், மஞ்சள் தூள், சோம்பு தூள்,) – அனைத்தும் தலா கால் கால் தேக்கரண்டி
  • தனியாதூள் – ஒரு தேக்க்ரண்டி
  • உப்பு – தேவைக்கு
  • தாளிக்க:

  • எண்ணை – இரண்டு தேக்கரண்டி
  • நெய் – அரை தெக்கரண்டி
  • கருவேப்பிலை – ஒரு தேக்கரண்டி பொடியாக நருக்கியது
  • கொத்துமைல்லி தழை – இரன்டு தேக்கரண்டி பொடியாக நருக்கியது

செய்முறை:

  • மட்டனை சுத்தம் செய்து அதைல் உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வைகள் போட்டு கலக்கவும்.
  • தக்காளி பச்சமிளகாயை மிக்சியில் அடித்து ஊற்றவும்.
  • அனைத்தையும் நல்ல வேக வைத்து.
  • கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இரக்கவும்.
  • கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கலக்கவும்.

0