Tag Archive | "Soup"

Tags: , , , , ,

Lamb leg soup Chettinad

Posted on 11 February 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்)
  • மிளகு -2- 3 டீஸ்பூன்
  • மல்லி – 2 டீஸ்பூன்
  • சீரகம் -2டீஸ்பூன்
  • பூண்டு – 6 பல்
  • மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 1 (விரும்பினால்)
  • நல்ல எண்ணெய் – 2டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • மல்லி இலை – சிறிது
  • கருவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை:

  • கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உறித்து வைக்கவும்.ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
  • மிளகு,சீரகம்,மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும்.மிக்ஸியில் மூன்றையும் போட்டு ,வெங்காயம்,பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  • குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட)தண்ணீர் வைத்து உப்பு போடாமல் , அரைத்த மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்,இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
  • ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும். கடாயில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்த வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம்.மல்லி இலை தூவவும்.
  • சுவையான,சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.இதனை அப்படியே பவுலில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.

0

Tags: ,

Chettinad Soup

Posted on 11 January 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • லவங்கம் — 1
  • தக்காளி — 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சைமிளகாய் — 1 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் — 1 (பொடியாக நறுக்கியது)
  • துவரம் பருப்பு நீர்– 2 கப் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்)
  • பூண்டு — 2 பல் (நசுக்கியது)
  • பால் — 1 கரண்டி
  • உப்பு — தே.அ

செய்முறை:

  • வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கவும்.
  • செட்டி நாடு சூப் தயார்.

0