Tag Archive | "Tamil Recipes"

Tags: , , ,

Attur Meat Curry

Posted on 29 June 2009 by Sarmila

Attur is my native place, In my place mutton curry is very spicy and delicious.
I like to share this recipe with you all.

Ingrediends:

  • மட்டன்(mutton) – அரை கிலோ
  • வெங்காயம்(onion) – 2
  • தக்காளி(tomato) – 2
  • மஞ்சள் தூள்(Turmaric Powder) – 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்(small Onion )– 100g
  • இஞ்சி பூண்டு விழுது(ginger garlic paste) – 1/2 tsb
  • எண்ணெய்(oil) – தேவையான அளவு
  • உப்பு(salt)– தேவையான அளவு
  • மசாலாவுக்கு(Masala):
  • மிளகு(pepper) – 1 ஸ்பூன்
  • சீரகம்(cumin seeds) – 1 ஸ்பூன்
  • சோம்பு(fennel seeds) – 1/2 ஸ்பூன்
  • வரமிளகாய்(Red Chilli) – 4
  • மல்லித்தூள்(அ)முழு மல்லி(coriander powder) – 1 ஸ்பூன்
  • பட்டை(Cinnamon stick) – 1
  • கிராம்பு – 2
  • முந்திரி (cashew)– ஐந்து
  • ஏலக்காய்(Cardamom) – 3
  • தேங்காய்(coconut ) – பாதி (ஒரு மூடியில்)
  • இஞ்சி(Ginger) – நெல்லிக்காய் அளவு
  • பூண்டு(Garlic) – 5-6 பல்

Method:

  • முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
  • அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
  • கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்
  • ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
  • தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

0

Tags: , , ,

பருப்பு உருண்டைக் குழம்பு

Posted on 15 June 2009 by Sarmila

Ingredients:

  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • பட்டாணிப் பருப்பு – 50 கிராம்
  • தேங்காய் – அரை மூடி
  • சின்ன வெங்காயம் – 40
  • பூண்டு – 10 பல்
  • தக்காளி – 2
  • மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி
  • சோம்பு – 1/2 தேக்கரண்டி
  • பட்டை – 1 சிறியது
  • கிராம்பு – 2
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • வரமிளகாய் – 3
  • இஞ்சி – கொஞ்சம்
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • கடுகு, உளுந்து – தாளிக்க
  • கறிவேப்பிலை, கொத்துமல்லி – கொஞ்சம்
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • துவரம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயில் பாதியை சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீதம் உள்ள தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
  • 2 பருப்பையும் அரைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, இஞ்சி, வர மிளகாய் அரைத்துப் பருப்புடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • பாதி வெங்காயம், கறிவேப்பிலை பாதி, உப்புச் சேர்த்து அத்துடன் பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பின் மீது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • மீதம் உள்ள வெங்காயம், பூண்டு போட்டுப் பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • உப்பு, புளி கரைத்த தண்ணீருடன் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த தேங்காய் விழுதை அதில் கரைக்கவும். அதில் மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் போது வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டுக் கொஞ்சம் கெட்டியானதும் கொத்துமல்லித் தழை கொஞ்சம் போட்டு இறக்கவும்

0

Tags: , , ,

Nethili Dry Fish curry

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய் -1கப்(நறுக்கியது)
  • நெத்திலிக்கருவாடு -20
  • புளிகரைசல் -1/4கப்
  • உப்பு -தேவையான அளவு
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • வறுத்து அரைக்க:

  • சின்னவெங்காயம் -10
  • தனியா -1/2ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -2
  • பூண்டு -2பல்
  • சீரகம் -1/4ஸ்பூன்
  • தேங்காய்துறுவல் -1/4கப்
  • தக்காளி -1
  • எண்ணை -1ஸ்பூன்
  • தாளிக்க:

  • எண்ணை -1ஸ்பூன்
  • கடுகு -1/4ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது
  • வெந்தயம் -1/4ஸ்பூன்

செய்முறை:

  • கருவாட்டை சுடுதண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து நன்கு அலசிவைக்கவும்.
  • வறுத்து அரைக்க குடுத்தவற்றை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்துவைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.
  • காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது,புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.
  • காய் வெந்தவுடன் கருவாடு போட்டு 5நிமிடம் கொதித்து குழம்பு சற்று கெட்டியானவுடன் இறக்கவும்.

0

Tags: , , , ,

Chettinad Channa Gravy

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

    Chenna, Indian Recipes, Cooking, Kids Recipes, Healthy Recipes, Food Recipes, Health Tips, Herbal, Chettinad Recipes, Samayal Kurippu

  • கொண்டைக்கடலை – நூறு கிராம்
  • சி.வெங்காயம் – இருபது
  • தக்காளி – மூன்று
  • மல்லிப் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி – ஒரு டீ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி – இரண்டு சிட்டிகை
  • புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
  • தேங்காய் – இரண்டு டீ ஸ்பூன்
  • சோம்பு – ஒன்றரை ஸ்பூன்
  • கடுகு + உளுந்து – ஒன்றரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை – இரண்டு கொத்து
  • உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும்.
  • முதலில் கொண்டைகடலையை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
  • புளியை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
  • சி. வெங்காயம் பதினெட்டையும், தக்காளியையும் வெட்டி வைக்கவும்.
  • தேங்காயையும் அரை ஸ்பூன் சோம்பையும் அரைக்க வேண்டும்.
  • கொண்டைக்கடலை முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளியை அதில் போடவும்.
  • மல்லி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
  • எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு குழம்பை இறக்கி விடவும்.
  • ஒரு சிறிய வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, சோம்பு போட்டு வெடித்ததும் சிறிய வெங்காயம் இரண்டை தட்டி போடவும்.
  • வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.

1

Tags: , ,

Somas

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு – 1 கப்
  • டால்டா – 1/4 கப்
  • வேர்கடலை – 1/2 கப்
  • வெல்லம் – 1/2 (அ) 3/4 கப்
  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

  • டால்டா, உப்பு சேர்த்து மாவை நன்று மிருதுவாக பிசையவும்.
  • வேர்கடலை வறுத்து தோல் நீக்கவும்.
  • வேர்கடலை, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
  • பிஸைந்த மாவை சின்ன சின்ன உருண்டையாக எடுத்து மெல்லிய சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  • இதன் நடுவில் வேர்கடலை வெல்ல பூரணத்தை வைத்து மடிக்கவும்.
  • ஓரத்தை விரலால் அழுத்து மூடி விடவும் (இல்லை என்றால் எண்ணெயில் போடும் போது விட்டுப்போகும்)
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

0

Tags: , ,

Carrot Ice cream

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 4
  • பால் – 1 கப்
  • சர்க்கரை – 1/4 கப்
  • மஞ்சள் பொடி அல்லது ஃபுட் கலர்- 1/2 சிட்டிகை
  • பிஸ்தா பருப்பு – 8
  • வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

  • கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
  • ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
  • குழந்தைகளைக் குஷிப்படுத்தும் இந்த ஐஸ்கிரீம்.

0

Categories