Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப் பொருட்கள்:
- பச்சரிசி – ஒரு கப்
- உளுந்து – ஒரு கப்
- தேங்காய் – ஒரு மூடி
- சீனி – கால் கப் + 2 மேசைக்கரண்டி
- ஏலக்காய் – 5
- உப்பு – ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் – 2 கப்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். ஏலக்காயை பொடிச் செய்து கொள்ளவும்.
- அரிசி, உளுந்து ஊறியதும் எடுத்து தண்ணீர் வடித்து விட்டு மற்றொரு முறை அலசி விட்டு கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து முழு உளுந்து இல்லாமல் நன்கு மையாக அரைக்கவும்.
- முழு உளுந்து அரைப்படாமல் இருந்தால் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். இட்லி மாவு பதத்தில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு ஒரு கப் தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றவும். வெந்நீரில் ஊற வைத்த தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- தேங்காய் பாலில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் சீனியை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி கிள்ளி போடவும்.
- உருண்டைகள் வெந்ததும் சிவக்க விடாமல் எண்ணெயை வடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
- அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தேங்காய் பாலில் இந்த சிறிய உருண்டைகளை போடவும். பணியாரத்தை அரை மணி நேரம் தேங்காய் பாலில் ஊற வைத்து பிறகு பரிமாறவும்.
Posted on 11 June 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- பால் – 2 லிட்டர்
- பாதம் – 15 கிராம்
- பிஸ்தா – 15 கிராம்
- முந்திரி – 15 கிராம்
- கார்ன்ப்ளேவர் – 1 மேசைக்கரண்டி
- ஜெலட்டின் – 2 தேக்கரண்டி
- ரோஸ் எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- ஐசிங் சுகர் – 200 கிராம்
செய்முறை:
- முதலில் 2 லிட்டர் பாலை நன்கு வற்றக்கய்ச்சி 1 லிட்டர் பாலாக ஆக்கவும்.
- பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை போட வேண்டும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிய தீயில்வைத்து கிளறவும்.
- நன்கு கெடியானதும் இறக்கவும்.
- பாதம்,முந்திரி,பிஸ்தாவை த்ண்ணீரில் ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- ஜெலட்டினை 50 மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை,ஜெலட்டின்,ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.
Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப்பொருட்கள்:
- நன்கு கனிந்த மாம்பழம் – 1
- ரவா – 3/4 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- நெய் – 1/2 கப்
- முந்திரிப்பருப்பு – சிறிது
- ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப் மாம்பழ விழுதிற்கு ஏற்றது.
- விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால், இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது. தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
- சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் அதில் பொடித்த ரவாவையும், சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு, கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும்.
- அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.
Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப்பொருட்கள்:
- பாதாம் பருப்பு – 1 கப் (குவித்து அளக்கவும்)
- சர்க்கரை – 1 கப் (தலைதட்டி அளக்கவும்)
- நெய் – 3 டேபிள்ஸ்பூன்
- குங்குமப்பூ – சிறிது
- ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் அல்லது கேசரி கலர் – சிறிது
- பாதாம் எஸ்ஸென்ஸ் – சிறிது
செய்முறை:
- வெதுவெதுப்பான நீரில் பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதன் தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
- அடி கனமான வாணலியில் அரைத்த பாதாம் விழுதையும், சர்க்கரையையும் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். முதலில் சர்க்கரை கரைந்து பாதாம் கலவை இளகி நீர்த்துக் காணப்படும்.
- கிளறிக் கொண்டே இருந்தால் சற்று நேரத்தில் கலவை கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். இந்த பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- பின்னர் அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விடவும். அல்வா சூட்டிலேயே நெய் உருகி விடும். அத்துடன் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பின்னர் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
குறிப்பு:
- கலரோ, பாதாம் எஸ்ஸென்ஸோ சேர்க்காமலும் இதை செய்யலாம். அல்வா வெண்மையாகவும், இயற்கை மணத்துடனும் இருக்கும்.
Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப்பொருட்கள்:
- உருளைக்கிழங்கு (பெரிய அளவு) – 2
- சர்க்கரை – 1 அல்லது ஒன்றரை கப்
- நெய் – 1/2 கப்
- ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
- பாதாம் எஸ்ஸென்ஸ் – ஓரிரு துளிகள்
- மஞ்சள் அல்லது கேசரி கலர் – ஓரிரு துளிகள்
செய்முறை:
- உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, தோலுரித்து விட்டு மசித்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்குடன் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
- முதலில் சர்க்கரை உருகி, கலவைத் தளர்ந்து பின் கெட்டியாக ஆரம்பிக்கும். இப்பொழுது கலரைச் சேர்த்து, நெய்யை சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளறவும்.
- அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறி, கீழே இறக்கி வைக்குமுன், ஏலக்காய்த்தூள், எஸ்ஸென்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வேகமாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
Posted on 11 June 2009 by Sarmila
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
- கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்தெடுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் உப்பைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவும்.
- அரிசியை வேக வைத்து சாதமாக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
- கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து காய் வேகும் வரை வதக்கவும்.
- பின் அதில் வாங்கி பாத் பொடியைத்தூவிக் கிளறவும். கடைசியில் சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
- பொரித்த அப்பளம், வடவம் அல்லது சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.