Tag Archive | "Tamil Recipes"

Tags: , , ,

Chicken Kulzhambu

Posted on 11 June 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

    chicken

  • கோழி (எலும்புடன்) – 3/4 கிலோ
  • வெங்காயம், பொடியாக நறுக்கியது – 1
  • தக்காளி, பொடியாக நறுக்கியது – 1
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
  • மிளகாய் வற்றல் – 10
  • தனியா – 1 மேஜைக்கரண்டி
  • மிளகு – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • பட்டை, லவங்கம்
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • ஏலக்காய் – 1 (விரும்பினால்)
  • தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • உப்பு
  • பூண்டு – 5 பல்
  • சோம்பு – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

  • கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
  • இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
  • இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், கோழி துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
  • தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். (கோழி விடும் நீரில் வெந்தால் குழம்பு ருசியாக இருக்கும்)
  • இதில் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்..
  • கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

0

Tags: , , ,

Beetroot Halwa

Posted on 11 May 2009 by Sarmila

தேவையான பொருட்கள் :

  • பீட்ரூட் (துருவியது) – ஒரு கப்
  • பச்சை பால் – இரண்டு கப்
  • சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ – அரை கப்
  • நெய் – நான்கு டேபிள்ஸ்பூன்
  • முந்திரி – ஒரு டீஸ்பூன்

செய்முறை :

  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடனும்
  • *நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
  • *கிளறிக்கொண்டே இருக்கணும்.
  • *கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறனும்.
  • *அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
  • *துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கவும்.
  • *டேஸ்டி ஹல்வா ரெடி.

0

Tags: , , ,

Puli satham

Posted on 11 May 2009 by Sarmila

தேவையானப்பொருட்கள்:

  • பச்சரிசி – 2 கப்
  • புளி – எலுமிச்சம் பழ அளவு
  • காய்ந்த மிளகாய் – 4
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • பெருங்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்
  • கொத்துமல்லி விதை – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணை – 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை

  • அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.
  • அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும்.
  • 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.
  • குறிப்பு:

  • இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

0

Tags: , , ,

கொண்டைக் கடலைக் குழம்பு

Posted on 15 March 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • கொண்டைக்கடலை – 100 கிராம்
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு – 2 பல்
  • தக்காளி – 2
  • தேங்காய் – 2 துண்டுகள்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 3 மேசைக் கரண்டி
  • கடுகு, உளுந்து, சோம்பு – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – கொஞ்சம்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • 1. கொண்டைக்கடலையைத் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற விடவும்.
  • 2. மறுநாள் கொண்டைக் கடலையை உப்புப் போட்டு 2 விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • 3. அடுப்பின் மீது ஓர் ஆழமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • 4. வெங்காயம், தக்காளி, பூண்டு சின்னதாக நறுக்கி, தாளித்த சாமான்களுடன் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
  • 5. மிளகாய்த் தூள், மல்லித் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
  • 6. தண்ணீரில் புளி கரைத்து அதில் ஊற்றவும்.
  • 7. அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாகக் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்

0

Tags: , , , ,

Chettinad Country Chicken Kuzhambhu

Posted on 11 March 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

    Image0183

  • நாட்டுக் கோழி கறி – ஒரு கிலோ
  • சி.வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 2
  • பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ – தாளிக்க
  • எண்ணை – 3 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
  • அரைக்க:

  • சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் பொடி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
  • பூண்டு – 6 பெரிய பல்
  • இஞ்சி – 5 கிராம்
  • வர மிளகாய் -15
  • மல்லி விதை – இரண்டரை டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
  • கசகசா – ஒரு டீ ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி பிசறி வைக்கவும்.
  • சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
  • மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
  • தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
  • வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
  • இப்போது கோழிக் கறியை நன்றாக நான்கு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
  • வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
  • ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் & சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
  • பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

0

Tags: , , ,

Date fruit halwa

Posted on 11 March 2009 by Sarmila

தேவையான பொருட்கள்:

  • பேரீச்சம்பழம்(விதைநீக்கிபொடியாகநறுக்கிய) – 1கப்
  • சீனி(சக்கரை) – 1கப்
  • நெய் – 1கப்
  • பால் -அரைகப்
  • பாதாம்பருப்பு – தேவையானளவு
  • முந்திரிப்பருப்பு – தேவையானளவு
  • குங்குமப்பூ – தேவையானளவு
  • வெந்நீர்(சுடுதண்ணீர்) – 1/2 கப்

செய்முறை:

  • முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன் வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு ஊற வைக்கவும் (பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு (4 – 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும் அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்கவேண்டும்).
  • பேரீச்சம்பழம் ஊறிய பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
  • ஒரு தட்டு முழுவதிற்கும் சிறிதளவு பட்டரை அல்லது நெய்யை பூசி வைக்கவும்.
  • பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் சீனி(சக்கரை),தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு காச்சவும்.
  • சீனி(சக்கரை) இளம்பாகு பதத்தை அடைந்ததும் அதனுள் அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது ,நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
  • அதன் பின்பு இதனுடன் முந்திரி, குங்குமப்பூ, பாதாம் பருப்பு ஆகியவற்றைபோட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
  • இவை யாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ அல்வா தயாராகி விட்டது.
  • பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய தட்டில் போடவும்.
  • தட்டில்போட்ட பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.
  • பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய ஆழத்திற்கு கோடுகளை போடவும்.
  • இவை யாவற்றையும் செய்த பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக ஆற விடவும்.
  • இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி எடுக்கவும்.
  • தேவையான அளவு வெட்டி எடுத்த பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை ஒருதட்டில் விரும்பியவடிவத்தில் வைத்து அடுக்கவும்.
  • அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பறிமாறவும்

0