Posted on 15 February 2009 by Sarmila
தேவையான பொருள்கள்:
- தூதுவளை இலை – 2 கப்
- புதினா – 1 கப்
- பூண்டு – 4 பல்
- இஞ்சி – 1/2 இஞ்
- சிறிய வெங்காயம் – 10 தோலுரித்ததும்
- சிவப்பு மிளகாய் – 6
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம்
- புளி – கோலிக்குண்டு அளவு
- தேங்காய் – 2 ஸ்பூன் துருவியது
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.
- கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
Posted on 15 February 2009 by Sarmila
தேவையான பொருள்கள்:
- தூதுவளை இலை காம்புடன் – 1 கப்
- புளி – எலுமிச்சையளவு
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பூண்டு – 4 பல்
- தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய்
- சிவப்புஉப்பு – தேவையான அளவு
செய்முறை:
- காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
- பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- நுரைத்து மேலே வரும் போது இறக்கவும்.
*நிறைய நேரம் கொதிக்க விடக்கூடாது.
Posted on 15 February 2009 by Sarmila
தேவையான பொருள்கள்:
- தூதுவளை இலை – 1 கப்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் – 2 கப்
- கொத்துமல்லி – சிறிது
- எண்ணெய் – சிறிது
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு, பொரிந்தவுடன் தூது வளை இலையைப் போட்டு நன்கு வதக்கவும்.
- ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- இத்துடன் பருப்பு வேகவைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு ஒரு கொதிவிடவும்.
- கடைசியாக கொத்துமல்லி தூவி பரிமாறவும்.