சிக்கன்-ஸ்பிரிங்-ரோல்ஸ்

தேவையான பொருட்கள்:

 • அவித்த சிக்கன் பீஸ் – 200 கிராம் (நீளமாக வெட்டவும்)
 • முட்டைக்கோஸ் – 50 கிராம் (நீளமாக வெட்டவும்)
 • கேரட் – 1 (நீளமாக வெட்டவும்)
 • குடமிளகாய் – 1 (நீளமாக வெட்டவும்)
 • வெங்காயம் – 1
 • சோயா சாஸ் – கால் டீஸ்பூன்
 • சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
 • அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
 • மைதா – 1 கப்
 • முட்டை – 4
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

 • கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி சிக்கன், காய்களைப் போட்டு வதக்கி சாஸ் வகைகளைப் போட்டு பிறகு உப்பு அஜினாமோட்டோ போட்டு வதக்கி இறக்கவும்.
 • கலர் மாறாமல் சுருள வதக்கவும். முட்டை, உப்பு, மைதா போட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
 • பிறகு சப்பாத்தி போல் இட்டு ஒரு ஓரத்தில் சிக்கன் கலவையை வைத்து சுருட்டவும். ஒரு சுருட்டு சுருட்டிய பிறகு இரண்டு ஓரங்களையும் நடுவில் மடித்து பிறகு சுருட்டவும்.
 • கடைசியில் தண்ணீர் கொண்டு ஒட்டவும். இப்படி எல்லாவற்றையும் செய்து பிரிஜ்ஜில் வைத்து தேவையான போது சூடான எண்ணெயில் பொரித்து சாஸ் உடன் பரிமாறவும்.