Milk Paniyaram

தேவையானப் பொருட்கள்:

  • பச்சரிசி – ஒரு கப்
  • உளுந்து – ஒரு கப்
  • தேங்காய் – ஒரு மூடி
  • சீனி – கால் கப் + 2 மேசைக்கரண்டி
  • ஏலக்காய் – 5
  • உப்பு – ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 கப்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். ஏலக்காயை பொடிச் செய்து கொள்ளவும்.
  • அரிசி, உளுந்து ஊறியதும் எடுத்து தண்ணீர் வடித்து விட்டு மற்றொரு முறை அலசி விட்டு கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து முழு உளுந்து இல்லாமல் நன்கு மையாக அரைக்கவும்.
  • முழு உளுந்து அரைப்படாமல் இருந்தால் எண்ணெயில் போடும்போது வெடிக்கும். இட்லி மாவு பதத்தில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு ஒரு கப் தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றவும். வெந்நீரில் ஊற வைத்த தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு பிழிந்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் சீனியை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி கிள்ளி போடவும்.
  • உருண்டைகள் வெந்ததும் சிவக்க விடாமல் எண்ணெயை வடித்து விட்டு உடனே எடுத்து விடவும்.
  • அரைத்து வடிகட்டி வைத்திருக்கும் தேங்காய் பாலில் இந்த சிறிய உருண்டைகளை போடவும். பணியாரத்தை அரை மணி நேரம் தேங்காய் பாலில் ஊற வைத்து பிறகு பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *